இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, சென்னையில் பெண்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. இதில் 5 பெண்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாகும்வரை உண்ணாவிரதம்
இலங்கையில் இனப்படுகொலை செய்யப்படும் அப்பாவி தமிழர்களை காக்க கோரியும், அங்கு போர் நிறுத்தம் செய்வதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகளுடன் பெண்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த 13-ந் தேதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை வந்தனர். அவர்கள் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த முத்துகுமார் உடல் வைக்கப்பட்டிருந்த கொளத்தூரில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
No comments:
Post a Comment